சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 – 2003 முதல் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022 – 2023 காரீப் கொள்முதல் பருவத்தில் 21. 08.2023 ஆம் தேதி வரையில், தமிழ்நாட்டில் 3526 எண்ணிக்கையிலான நேரடி கொள்முதல் அரசால் திறக்கப்பட்டு, அந்நிலையங்கள் வாயிலாக சுமார் 5,20,503 விவசாயிகளிடமிருந்து சுமார் 43,84,226 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
நடப்பு 2023 – 2024 ஆண்டிலும், காரீப் கொள்முதல் பருவத்தில் அரசு சார்பில் தேவையான அளவு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துவுள்ளதாகவும், மேலும் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
இந்நிலையில் நடப்பாண்டு காரீப் பருவத்திற்கான கொள்முதலினை முதலமைச்சர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் எதிர் வரும் 1.09.2023 முதல் மேற் கொள்ள ஒன்றயரசு ஒப்புதல் வழங்கிவுள்ளது.
மேலும் ஒன்றிய அரசு 2023 – 2024 பருவத்திற்கு குறைந்தப்பட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,183 என்றும் சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,203 எனவும் விலை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் நெல் உற்பத்தியை பெருக்கிடும் வகையிலும் மேலும் விவசாயிகளின் துயர் துடைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு கே.எம்.எஸ் 2023 – 2024 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82 ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 ம் கூடுதல் ஊக்கத்தொகையாக தமிழக அரசின் நிதியிலுந்து வழங்க ஆணைப் பிறப்பித்து அதன் படி சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,265 எனவும், சன்னரக நெல் குவிண்டால் ரூ. 2,310 எனவும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு அதற்கான ஆணையினைப் பிறப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசுப்பிறப்பித்துள்ள நெல்லிற்கான புதிய குறைந்தப் பட்ச விலை எதிர் வரும் 01,09,2023 முதல் விவசாயிகளுக்கு வழங்கிடவும் முதல் அமைச்சர் அவ்வாணையில் குறிப்பிட்டுள்ளார்.




















