அத்திப்பட்டு, ஆக. 07 –

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது

இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீ மிதி விழாவல் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் உள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதி பராசக்தி எல்லையம்மன் ஆலயம் அமைந்துள்ள இத்திருக் கோயிலின் 40 ஆண்டு தீ மிதி திருவிழா அருள் பக்த சபா நெட்டுக்குப்பம் சார்பில் நேற்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவினை முன்னிட்டு, இத்திருக்கோயிலில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அம்மனுக்கு கொடியேற்று விழாவும், தீப ஆராதனையுடன் சிறப்பு பூஜைகளுடன் இவ்விழா தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அபிஷேகமும், மேலும் அத்திருக்கோயிலில் தனி சன்னதியில் அமர்ந்துள்ள ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அபிஷேகமும், ஏகாத்தமனுக்கு நெய்வேதியம் தினமும் மூன்று வேளை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றது.

தொடர்ந்து, நேற்று அம்மனுக்கு ஏகாத்தம்மன் கோயிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் மற்றும் பால்குடத்தினை எல்லையம்மன் சன்னதிக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர்.

மேலும் நேற்று மதியம் பொது மக்களுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது, மாலை எல்லை அம்மன் கோவில் சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், திருவொற்றியூர் குப்பம், எண்ணூர் குப்பம், முகத்தை வார குப்பம், காட்டுக்குப்பம்,  பெரிய குப்பம், சின்ன குப்பம், செம்மணலி காட்டுப்பள்ளி, கருங்காலி, மவுத்தம்பேடு, செப்பாக்கம், உள்ளிட்ட 30 – க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவல் பங்கேற்று தீக்குழியிறங்கினார்கள்.

இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும், அருள் பக்த சபா நெட்டுக்குப்பம் நிர்வாகிகள் கண்ணன், இளையரசு,கோபி, குருசாமி செல்வம், கௌரவ தலைவர்கள் மணி, கிருஷ்ணன், ராஜேந்திரன், பாலு,பாஸ்கர், கஜேந்திரன், தேசப்பன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here