அரியலூர், ஆக. 06 –
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று அங்கு ஆய்வு மேற் கொண்டனர்.
இவ்வாய்வின் அமைச்சருடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமயநலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் க.மணிவாசகம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜ.ஆனிமேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு,சின்னப்பா, ஜெயங்கொண்டாம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாய்விற்கு பின் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிக்கும் போது, கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பா அகழாய்வுப் பணிகள் நடைப்பெற்று வருகிறதெனவும், மேலும் இவ்வகழாய்வு பணிகளை முதலமைச்சரே தொடங்கி வைத்து அதில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை நேரடியாக பார்வையிட்டுள்ளார் எனவும், அதனைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக உலக புகழ் வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைப்பெறக் கூடிய இவ்வகழாய்வுப் பணிகள் இக்கோயிலில் உள்ள முக்கியத்துவம், குறிப்பாக சோழப் பெருவேந்தர்களில் தனக்கென மிகப்பெரி இடத்தினைப் பிடித்த மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பெருமையை பறைச்சாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழப்புரத்தில் உலகத் தரத்திலான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுயிருந்தார்கள்.
மேலும் இந்த அருங்காட்சியகம் எங்கு அமைந்தால் சிறப்பாகயிருக்கும் என்பதற்காக அவ்விடத்தினை தேர்வு செய்யும் பொருட்டு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதெனவும், அதன்படி கங்கைகொண்ட சோழப்புரம் கோவிலின் அருகில் உள்ள இடத்தினையும், குருவாலப்பர்கோவில் அருகேவுள்ள மற்றொரு இடத்தினையும் நேரடியாக பர்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதெனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்விரு இடங்களில் எவ்விடம் மிகச்சிறப்பாகவும் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலிருக்கும் என்பதை முடிவு செய்து அதறைகானப் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டம் முதலமைச்சரின் நேரடியான ஆய்வுக்குட்பட்ட தனித்துவமான திட்டங்களில் வரக்கூடிய ஒன்றாகும் எனவும், இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி மிக விரைவில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவும் மக்களைக் கவரக்கூடிய வகையில், சிறந்த முறையில் உலகத்தரத்தில் இவ்வருங்காட்சியகம் அமைய வேண்டும். மேலும், இது சோழர்களின் புகழை குறிப்பாக இராஜேந்திர சோழனுடைய புகழை பறைச்சாற்றும் வகையிலும், கங்கைகொண்ட சோழப்புரத்திற்கும் பெருமைச் சேர்க்கும் வகையிலும் அமைய வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தொடர்ந்து, மாளிகைமேடு பகுதியில் நடைப்பெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பொருட்களின் விவரம் குறித்து கேட்டறிந்தும், தொடர்ந்து உட்கோட்டை பகுதியில் நடைப்பெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட மதில் சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீ.நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூணினை அமைச்சர்கள் தங்கம்தென்னரசு மற்றும் சா.சி சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இவ்வாய்வில், அகழாய்வு பணிகள் இணை இயக்குநர் ( சென்னை ) சிவானந்தம், இந்தி சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ( கடலூர் ) பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குநர் பிரபாகரன், துணை இயக்குநர் பாக்கியலெட்சுமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.




















