எல்லாபுரம், ஆக. 04

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும் கல்லூரி மாணவர்கள் நாடக காட்சிகளாக நடித்து காட்டினார்கள்.

தொடர்ந்து, தாய் சேய் நலப் பணிகளை உள்ளார்ந்த அன்போடும் அரவணைப்போடும் செய்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்களை பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி மற்றும் மஞ்சங்கரனை வேல்ஸ் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here