திருவாரூர், ஜூலை. 15 –
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர் பள்ளியில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு அக் கல்வி நிறுவனம் சார்பில் மலர்மாலை சூட்டி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று நடித்த பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது.
நிகழ்வின் நிறைவில் இந்நாடகத்தில் சிறப்பாக நடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, அறக்கட்டளை உறுப்பினர் ஜெயராஜ் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இவ்விழாவிற்கு மேலும் சிறப்புச்சேர்த்தனர்.