செங்கல்பட்டு, ஜூலை. 14 –

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருவார தூய்மை அனுசரிப்பு எனும் பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சினை கடந்த இரு வாரங்களாக அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்நிகழ்சிகளை செங்கல்பட்டு கிளை அலுவலக முதன்மை மேலாளர் எஸ்.குமார், லெட்சுமி பிரவீன், உதவி மேலாளர்கள் கருணாகரன், இராகுல் உள்ளிட்டவர்களின் தலைமையிலும் மற்றும் அறிவுறுத்தலின் படி அவ்வலுவலக இஞ்ஜினியர் காளிதாசன் பல்வேறு குழுக்களை வழி நடத்தி அப்பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கும், அரசு பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகின்றனர். மேலும் இதில் அவ்வலுவலக ஊழியர்கள்மற்றும் பணியாளர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நடை மற்றும் மிதி வண்டி பிரச்சார பேரணிகளில் பங்கேற்றும், கடலோரோ குப்பைக்கூலங்களை அகற்றியும் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இருவார தூய்மை அனுசரிப்பின் 12 ஆம் நாளான நேற்று    ( ஜூலை – 13 )  விழுப்புரம் மாவட்டம் காஞ்சனூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் செங்கல்பட்டு அலுவலக முதன்மை மேலாளர் எஸ். குமார் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் அந்நிகழ்வில் வனத்துறை அலுவலர் சுகுமார் பக்கேற்று தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மைக் குறித்து சுகுமாரும், எஸ் குமார் உள்ளிட்டவர்கள் அக்கிராம மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்களுக்கு ஆழ்துளை குழாய் மூலம் நீர் எடுக்கும் மோட்டார், புல் வெட்டும் மற்றும் துளையிடும் இயந்திரம் உள்ளிட்டவைகளும், மேலும், வேளாண்மைக்கு தேவையான வேளாண்மை உபகரணங்களை அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கினார்கள். மேலும் அப்பகுதி கிராம மகளிருக்கு 200 ஹைஜின் கிட்டினையும் வழங்கினார்கள்.

அதுப்போன்று விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் உள்ள 4 அரசு பள்ளி மாணவிகளுக்கும் அப்பள்ளிக்கும் சானிட்டரி நாப்கின் வெண்டிங்க் மெஷின் மற்றும் இன்செனரேட்டர் பர்னிங்க் மெஷினையும் வழங்கினார்கள்.

தொடர்ந்து அப்பள்ளிகளில் சிதிலமடைந்திருந்த கழிவறைகள் மற்றும் கை அலம்பும் நீர் தொட்டி ஆகியவற்றை சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் அந்நிறுவன நிதியமைப்பில் இருந்து அதனை சீரமைத்து தந்தனர்.

மேலும் அப்பள்ளி மாணவர்களிடையே ஓவியப்போட்டி நடத்தி, அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு கிளை அலுவலகத்தின் முதன்மை மேலாளர் எஸ்.குமார் மற்றும் அந்நிறுவன ஊழியர் குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் அக்கிராமத்தை சார்ந்த பெண்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஏரியின் கரையினை வலுப்படுத்திடும் வகையிலும் மேலும் பசுமையை ஏற்படுத்தும் வகையில் ஏரிக்கரையின் கரையோரம் சுமார் 2 ஆயிரம் மரங்கள் நடும் பணியில் ஈடுப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, சென்ற ஆண்டு அப்பகுதியில் மரம் நட்டு அதனைப் பேணி காத்து வளர்த்த கிராம மக்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியும், அவர்களை பாராட்டுத் தெரிவித்தும் அவர்களை  ஊக்கப்படுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here