பொன்னேரி, ஜூலை. 12 –
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள்விழா எதிர் வரும் ஜூலை 15 வரவுள்ள நிலையில், அவ்விழாவினை பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் எதிரேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அப்பகுதி காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ்வாலோசனைக் கூட்டத்தில் கர்ம வீரர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழாவினை வருகின்ற ஜூலை 15 ஆம் தேதியன்று, பொன்னேரி வட்டாரப் பகுதிகளில், வெகுச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுவதென அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பில் ஒட்டு மொத்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கூட்டம், மாவட்டத் துணைத் தலைவர் ஏ. ஜி.சிதம்பரம் தலைமையிலும், மாநில துணைத்தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் வட்டாரத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இக் கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் வந்திருந்து, நிர்வாகிகள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.
தொடர்ந்து, காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை வெகுச்சிறப்பாக கொண்டாடுவதுக் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் அந்நாளில் அப்பகுதி வாழ் பொதுமக்களுக்கு பல்வேறு நல திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தனித்திறன் போட்டிகள் நடத்தி சிறப்பு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதெனவும், கட்சிக்கம்பத்தில் புதிய காங்கிரஸ் கட்சிக்கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துதல் மற்றும் மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவதெனவும் தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதெனவும் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பொன்னேரி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் புருஷோத்தமன் உதயகாந்தி. உமாபதி. கோவிந்தராஜ், துரைவேல் பாண்டியன் மாவட்ட பொறுப்பாளர்கள் கோபிகிருஷ்ணன், கோவர்தனன், பொன்னேரி நகர நிர்வாகிகள் ஜான் ,பூபாலன், ஜெய்சங்கர் மகிலா காங்கிரஸ் தலைவர் எழிலரசி. உள்ளிட்டவர்களும், மற்றும் திரளான மாவட்ட , நகர, ஒன்றிய, ஊராட்சி, கிளை பகுதிகளின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.





















