பொன்னேரி, ஜூலை, 07 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம், மீஞ்சூர் வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், மாவட்டத் துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் பொன் மகேஷ், குணசேகரன், கோபிகிருஷ்ணா, நந்தகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக மத்தியரசின் தலையீடைக் காரணமென புகார் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில், ஓ பி சி தலைவர் உமா மகேஷ், மகிளா காங்கிரஸ் பொன்னேரி தொகுதி தலைவர் எழிலரசி, பொறுப்பாளர்கள் கந்தசாமி, ஜான், திருவருட்செல்வன், பாலாஜி, பிரசாந்த் ,விக்கி, ஜெய்சங்கர், செல்வா, வசந்தி, ராஜு மாஸ்டர் ,தமிழ்ச்செல்வி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




















