பொன்னேரி, ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பஞ்செட்டியில் அமைந்துள்ளது. வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளி, மேலும் இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி. சாரண சாரணியர் விழா, அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அப்பள்ளிக் கல்வி குழுமத்தின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் ஆலோசனைப்படி பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாரண ஆசிரியர் இளங்கோவன் ஆசிரியை ஐரின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தும் போது, இப்பள்ளி கல்வியிலும் விளையாட்டிலும் பன்முகத்திறன் வளர்ப்பிலும் சமுதாயப் பணியிலும் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர்வதற்கும் தலைமை பண்புகள் உருவாவதற்கும் இப்பள்ளி மாணவர்கள் செயல்பட வேண்டுமென அறிவுத்தினார்கள்.
விழாவின் நிறைவில் பள்ளி துணை முதல்வர் தேவராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்று விழாவினை சிறபித்தனர்.























