மீஞ்சூர், ஜூன். 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழாவிற்காக நான்கு கால யாகசாலை கலச பூஜைகள் நடைப்பெற்றது.
மேலும் அதனைத்தொடர்ந்து, இன்றுகாலை 9 மணியளவில் கடந்ங்களில் நிரப்பி வைக்கப்பட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், யாகசாலையில் இருந்து கடப்புறப்பாடு திருக்கோயிலை வலம் வந்து, கோபுர கலசத்திற்கு சிவச்சாரியர்கள் கொண்டு சென்றனர் தொடர்ந்து புங்கம்பேடு உ.வே.சுதர்சனாச்சாரியார் வேதங்கள் முழங்க மேளதாள இன்னிசை முழங்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருக்கு தீபாராதனை செய்விக்கப்பட்டு கும்ப கலசத்திற்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் இனிதே நடைப்பெற்றது.
தொடர்ந்து மூலவர் அருள்மிகு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி விக்கரகம் மற்றும் கிராம தேவதைகள், காவல் தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் இவ்விழாவினை அக்கிராம மற்றும் சுற்று வட்டாரக்கிராமங்களைச் சார்ந்த எண்ணற்ற அளவில் அவ்வூர்மக்கள் என திரளானவர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் மற்றும் கோபுர தரிசன வழிபாடு செய்து வணங்கினார்கள். மேலும் அவர்கள் அனைவருக்கும் சுவாமி பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் அன்பாலயா சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன், வார்டு உறுப்பினர் ரஜினி, உள்ளிட்டவர்கள் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் இக்கோவில் அமைந்திருக்கும் பகவான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேண்டிய காரியம் நிறைவேறும் என்பதும் ஐதீகமாக உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் சீனிவாசன் ,வேதாச்சலம், மகேஸ்வரன், மோகன்தாஸ், சங்கர், வெங்கடேசன் ,நாராயணன், எல்லுமுத்து திருமலை உள்ளிட்டவர்களும், கிராம பொதுமக்களும், எஸ்பிசிடி சேவை மையம், மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்,






















