கும்பகோணம், ஜூன். 20 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இன்று நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தினர் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த சில காலங்களாக தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அவ்வலுவலரின் செயலைக்கண்டித்து இன்று அவர்கள் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கண்டன முழக்கங்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் ஊராட்சி கிராமங்களில் அடிப்படை வசதியான சாலை வசதி, கழிவறை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றக்கோரியும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
மேலும் இவ்வார்ப்பாட்டம், நீலப் புலிகள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் இராஜா, தலைமையில் நடைபெற்றது. இதில் நீலப் புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், துணை பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் காமராஜ், மாநில துணை தலைவர் ரமேஷ் அம்பேத், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், சுரேஷ், சுஜித்குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.






















