திருவாரூர். ஜூன். 05 –
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், இம் மாநாட்டுக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அமைச்சர்களுடன் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.