பழவேற்காடு, மே. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள லைட் ஹவுஸ் ஊராட்சியில், உயர் தொண்டு நிறுவனம் சார்பில் மீனவ மற்றும் பழங்குடியினக் கிராம குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு கல்விப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அக்குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணினி, விளையாட்டு, மற்றும் பாடல், நடனம் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளும் உயர் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
இச் சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு நாளில், பங்கேற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அக்குழந்தைகள் அனைவருக்கும் பரிசு மற்றும் பயிற்ச்சி சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இச்சிறப்பு பயிற்சி முகாமில் லைட் ஹவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், தன்னார்வலர் கதிர்வேடு வில்சன், உயர் தொண்டு நிறுவன நிர்வாகிகள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மஞ்சு, வீரம்மா உள்ளிட்டோர் இம்முகாமில் பங்கேற்று, சிறப்பு சேர்த்தனர்.





















