திருவாரூர், மே. 28 –

திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப் பார்வையாளர் பேட்டை சிவா இக்கூட்டத்தினை வழிநடத்தினார். மேலும், இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி அறிவிப்பு தீர்மானங்கள் உட்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் நகராட்சியினால் அந்நகர மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், மேலும் நகராட்சியின், தவறான செயல்பாடுகளைக் கண்டித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் நகரில் குப்பைகள் பராமரிப்பை நகராட்சி சரிவர பராமரிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டியும், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பும் கேளவிகளுக்கு தவறான பதில்களை தருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஓடம்போக்கி ஆற்றை சரிவர பராமரிப்பு செய்யாமல் இருப்பதாகவும், மேலும் அந்த ஆறு தற்போது கூவம்  நதிபோல் மாறி வரும் சூழ்நிலையிலும் நகராட்சி நிர்வாகம்  அது பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாதது கண்டிக்கத் தக்கதெனவும், பாலிதீன் குப்பைகளை ஆற்றில் கொட்டி வரும் ஜவுளி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அத்தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக நகராட்சி ஆணையர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்கள் கடைகளாக மாற்றப்பட்டு வருவதை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

மடப்புரம் பாலம் குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் வந்து பார்த்தார், ஆனால் தற்போது முதல்வரான பின்பு, இப்பாலம் குறித்துக் கண்டு கொள்ளவேயில்லை எனவும், உடனடியாக அங்கு புதிய பாலத்தினை அகலாமாக கட்டிட வலியுறுத்தியும்,

திருவாரூர் நகர புதிய பேருந்து நிலையம் இருக்கும் அவல நிலையை கண்டித்தும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்காக இன்று அர்ப்பணித்த பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தும்,

இந்திய திருநாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் சோழர்கள் கால பாரம்பரியமிக்க தங்கத்திலான செங்கோலை ஆதீனங்கள் நம் பாரத பிரதமருக்கு வழங்கியதை பெருமை கொள்வதாகவும் தெரிவித்து அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் நகர பொருளாளர் எம் பி ரமேஷ் வரவேற்று பேசினார் செயற்குழு நிகழ்விற்கு பிறகு பாரதப் பிரதமர் அவர்கள் உரை நிகழ்த்தும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார் அதன் பின் நகர நிர்வாகிகளுடன் மாவட்டத் தலைவர் பாஸ்கர் பாரத பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்து வழங்கிய புதிய பாராளுமன்றம் கட்டிடம் திறப்புக்கு பின்பாக  பேருந்து நிலையம் மற்றும் அதன்  பகுதிகளில் இனிப்புகளை வழங்கி வெடி வெடித்து கொண்டாடினார்கள்

மாவட்ட துணை தலைவர் மணிமேகலை மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் அமுதா நாகேந்திரன் நகர பொதுச்செயலாளர் கோவை நடராஜன் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கழுகு சங்கர் ஐடி பிரிவு மாவட்ட தலைவர் அருண் செயற்குழு உறுப்பினருக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நகர செயலாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here