செங்கல்பட்டு, மே. 12 –
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர், தமிழகத்தில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா விற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுப் பெற்று, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கும் தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும் தமிழகத்தில் உள்ள ஆளுநர் எல்லை தாண்டி செயல்படக் கூடியவராக இருக்கிறார். மேலும் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக கவர்னர் மாளிகையை ஒரு போட்டி அரசாங்கம் போல நடத்துவதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வாதக கூறினார்.
மேலும், ஆளுநர் மீது மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினார்.
மேலும், இதுக் குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அவர், கர்நாடக தேர்தலை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரு நல்ல செய்தி வரும் என தகவல் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வந்திருக்கிறது. எனவும், பொதுவாக பிஜேபி அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைக்காது என்பது மேலும் ஒரு நல்ல செய்தி எனவும்,
தற்போது நடைபெறுகிற எல்லா மாநில தேர்தல்களிலும், பல மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எனத் தெரிவித்த அவர், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்றவாறு பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.























