திருவள்ளூர், ஏப். 18 –
திருவள்ளூர் மாவட்டம், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எளாவூரில் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட் உள்ளது. இம்மீன் மார்க்கெட்டில் பல ஆண்டு காலமாக கழிவறை இல்லாமல் திறந்த வெளியை பொதுமக்களும் மீன் வியாபாரிகளும் பயன்படுத்தி வந்த நிலையில்,
மத்திய அரசின் திறந்தவழி கழிப்பறை அகற்றல் திட்டத்தின் கீழ் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு மத்தியரசின் நிதி தொகுப்பிலிருந்து, ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் இம் மீன் மார்கெட்டில் கழிவறை கட்டத் திட்டமிட்டு அதன் கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முடிவடைந்தது.
மேலும் அக்கழிவறை கட்டிடம் முழுமை அடையாமலும், கழிவறை கதவுகள் சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலையிலும் மேலும் அக்கழிவரைக் குறித்த தரச் சோதனைகளை கடைப்பிடிக்காமலும் அவசர அவசரமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அக்கழிவறை தரமற்றமுறையில் கட்டிமுடித்த கட்டட ஒப்ந்தக்காரருக்கும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் பணத்தினை விடுவித்துவுள்ளதாகவும் மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அக்கழிப்பறை கட்டப்பட்ட சில மாதங்களிலேயே கதவுகள் பயன்படுத்த முடியாதவாறும், மேலும் அக்கட்டடத்திற்கு பூசப்பட்ட பெயிண்டுகள் வரை அனைத்தும் சிதிலமடைந்து அக்கழிவறையை மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் மத்தியரசின் திறந்தவெளி கழிப்பறையை மக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை தடுக்கும் அத்திட்டம் பயனற்றதாகவும் மேலும் அந்நிதியும் வீணாகிப் போனதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இப்பிரச்சினைத் தொடர்பான கழிவறைப் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரச்சினைத் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுப்போல் தரக்குறைவாக அக்கழிவறையை கட்டிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்யவும் ஆய்வு செய்யாத பண பரிவர்த்தனை செய்த வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




















