கும்பகோணம், ஏப். 08 –
கும்பகோணம் இந்திராகாந்தி சலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிரஞ்சோதி பொற்பனை மூனீஸ்வார், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சுந்தர மஹா காளியம்மன், ஸ்ரீ ரேணுகா தேவி (எ ) பச்சை காளியம்மன் ஆகிய திருக்கோயில்களின் 108 ஆம் ஆண்டு பங்குனி மாத காளி திருநடனம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இப்பங்குனி மாதம் ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் நடைப்பெறும் இவ்விழாவனை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி கணபதி ஹோமம் பூர்வாங்க பூஜையுடன் தொடங்கி 3 ஆம் தேதியன்று ஸ்ரீ பச்சைகாளி ஸ்ரீ பவளக்காளி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தொடங்கியது. மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து முக்கிய நாளன 5 ஆம் தேதி புதன்கிழமையன்று, இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாமக குளத்திலிருந்து சக்திவேல், சக்தி கரகம், அக்னிசட்டி, அக்னி கொப்பரை, பால்குடம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
மேலும் அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ சுந்தர மஹா காளியம்மன், ஸ்ரீ ரேணுகா தேவி (எ) பச்சை காளியம்மன், மற்றும் விநாயகர், திரு வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. மேலும் எதிர் வருகின்ற 9 ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை விடையாற்றுதல் நிகழ்ச்சியுடன் இவ்வாண்டிற்கான பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. என அத்திருக்கோயில் விழா கமிட்டியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற அனைத்து ஏற்பாடுகளையுப் அத்திருக்கோயில் விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.





















