பொன்னேரி, மார்ச். 29 –

சென்னை  உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர்.

அதனைத்தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடுமுழுவதும் இபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும்,  தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இனிப்புகள் வழங்கி ஒரு விழாவினை போல் மகிழ்ச்சியோடு நேற்று கொண்டாடினார்கள்.

அதன் தொடர்ச்சியாக பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் மீஞ்சூர் ஒன்றிய கழகச் செயலாளர் நாலூர்  முத்துகுமார். பொன்னேரி நகர கழக செயலாளர் செல்வகுமார். உள்ளிட்ட திரளான அதிமுக கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here