மீஞ்சூர், மார்ச். 28 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி தலைமை வகித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ராஜா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இவ்விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தினை பெருந்தலைவர் ரவி ரிப்பன் பட்டி திறந்து வைத்தார்.

மேலும், இவ்விழாவினை முன்னிட்டு பொத்தம்பேடு கிராம பொதுமக்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், மற்றும் மாணவர்கள் அமர்வதற்கு சேர், டேபிள், பீரோ, எழுதுகோல், உள்ளிட்ட கல்விக்கான உபகரணங்களை அப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசையாக வழங்கினார்கள்.

மேலும் இச்சிறப்பு மிக்க இவ்விழாவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சகீராபானு, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், கிராம நிர்வாகிகள் அப்பாவு, சிங்காரம், விஜயகுமார், மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோதண்டம், பிரசாத், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சரளா கோவிந்தராஜ், நந்தகுமார், ரவிவர்மன், ஊராட்சி செயலர் மாது, மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் தங்கவேல், மாலினி, ஜெசிஎஸ்தர் ராணி, ராஜேஷ் கண்ணா, ராஜ்குமார், ஜோதி, ஸ்டாலின், சோழன், வரதன் உள்ளிட்டவர்களும் மேலும் திரளான அக்கிராம பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here