கும்பகோணம், மார்ச். 25 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் பட்டதாரி ஆசிரியை நளினி, திருமங்கலக்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பாத்திமா பேகம் ஆஷாத் அலி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா, திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலர் நிவேதா, மேற்பார்வையாளர் பாக்கியராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய சிறப்பு விருந்தினர்கள்
மேலும் இப்பகுதியில் உள்ள இந்த குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் கல்விப்பயிலும் மாணவர்கள், தனித்திறமையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். எனவும், மேலும் இப்பள்ளி ஆசிரியர்களின் தனிச்சிறப்பால், தனியார் பள்ளிக்கு நிகராக இவ்அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் பாடுபட்டு வருகிறார்கள் என அப்போது அப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் புகழராம் சூட்டினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக தமிழ் ஆங்கிலம் மொழிகளில் சிறப்பாக பேசினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியாக வெல்கம் டான்ஸ், கரகாட்டம், கிராமிய பாடல்கள், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அக்கலைவிழாவினை கண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் தன்னை அறியாமல் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் கைதட்டி கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.. அதனை தொடர்ந்து நாளை 2ம் நாளாக திருவிடைமருதூர் சண்முக.கண்ணன் தலைமையில் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பாட்டு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
இதில் ஆண்களே என்ற தலைப்பில் வாதிட கண்ணதாசன், பிரபாகரன் ஆகியோரும், பெண்களே என்ற தலைப்பில் வெண்மணி சிந்து, ரம்யா ஆகியோர் வாதிட உள்ளனர்.
மேலும், தனியார் பள்ளிக்கு மேலாக நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக ஆடியும், மற்றும் ஆங்கிலம், தமிழ்மொழிகளில் சிறப்பாக பேசிய மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிராமத்தினர் அவர்களுக்கு மனதார தங்கள் பாராட்டினை தெரிவித்தனர்.




















