திருவாரூர், மார்ச். 22 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி சார்பில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் அதன் சேமிப்புக் குறித்தும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இக்காலக் கட்டத்தில் தண்ணீரை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை அனைவரும் மேற் கொண்டால் அவ்வறட்சி நிலையை எதிர் கொள்ளலாம் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலும், இப்பேரணியை நகராட்சி மேலாளர் முத்துக்குமார் துவக்கி வைத்தார் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் தங்கராமன் மற்றும் ரவிச்சந்திரன் நகராட்சி பரப்புரையாளர்கள் பொது சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு முறையிலான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு, மீண்டும் மாலை நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.



















