கும்பகோணம், மார்ச். 19 –

கும்பகோணம் அருகேயுள்ளதும், தமிழக திருப்பதி என்று பலரால் போற்றப்படுவதும், மேலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு பகலிராப்பொய்கை புஷ்கரணியில், உற்சவரவரான அருள்மிகு ஸ்ரீ பொன்னப்பர்சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும் தேசிகனும் எழுந்தருள, அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்பு, பங்குனி தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் தமிழக திருப்பதி என்றும் போற்றப்படும்  அருள்மிகு ஸ்ரீ உப்பிலியப்பன் சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலை மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி மாத திருவோணத்தை முன்னிட்டு, காலையில் தங்க திருதேரோட்டம் நடைப்பெற்றது. அதில் பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்கத் தேருக்கு எழுந்தருள, பிரபந்த கோஷ்டியினர் 4 ஆயிர திவ்ய பிரபந்தங்கள் பாடியபடி வர, கோயில் யானை பூமா முன் செல்ல நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க தங்க திருத் தேரோட்டமானது மிக்ச் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இன்று பகலிராப்பொய்கை புஷ்கரணிக்கு உற்சவர் பொன்னப்பர் பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும் தேசிகனும் வந்து எழுந்தருள, சுவாமிக்கு தேன், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், என பலவிதமான பொருட்களை கொண்டு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, பட்டாட்சாரியாகர்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, பகலிராப் பொய்கை புஷ்கரணியில், மும்முறை முங்கி எழ, பங்குனி தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here