திருவாரூர், மார்ச். 16 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆர்.குமரராஜா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம். கலைமணி, மாவட்ட பொருளாளர் ஆறு.பிரகாஷ் மற்றும் பெண்கள் உள்ளிட்ட  ஏராளமானவர்கள் பங்கேற்று விவசாயத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வலியுறுத்தி உரக்க முழக்கமிட்டனர்.

மேலும், 1942 ஆம் ஆண்டு கூலி சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச சட்டக் கூலியை அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச கூலியை உயர்த்தி அறிவிக்கவில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப கூலியில் வாழ்க்கை நடத்த முடியாமல் விவசாயத் தொழிலாளிகள் நாட்டின் பெருநகரங்களுக்கு வேலை தேடி செல்வது அதிகரித்து வருகிறது.

எனவும், இதனால் விவசாயம் மிகவும் பாதிக்கப் படும் நிலை உருவாகி வருகிறதெனவும், எனவே அரசு விவசாயக் கூலித் தொழிலாளர் நலன் கருதி அரசு எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், வேளாண் வேளாண் துறை சார்ந்த வேலைகள் சட்ட கூலியை ரூ 600 /ஆக உயர்த்திய அறிவிக்க வேண்டும் ,8/1பங்கு தமிழ்நாட்டில் பங்கு விவசாய தொழிலாளர் வசிப்பதை கணக்கில் கொண்டு முதியோர் ஓய்வுதியம் , மருத்துவ காப்பீடு,கல்வி மற்றும் இதர சமூக நலத்திட்டங்களை விவசாய தொழிலாளர்க்கு கிடைத்திட தனித்துறை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  தமிழ்நாடு அரசு வரும் பட்ஜெட்டிலேயே அறிவித்து நிறைவேற்ற வேண்டும் என மாநில செயலாளர் சங்கர் கோரிக்கை உரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here