மீஞ்சூர், மார்ச். 10 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி பங்களிப்பு திட்டத்தில் ரூ. 2 கோடியே 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை பணிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர். துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் திட்ட பணிகளை தொடங்கி வைத்து அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை பயனாளிகளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தை துரை சந்திரசேகர் வழங்கினார்.