நன்னிலம், மார்ச். 09 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் கடந்த 06.03. 2023 அன்று வீதி விடங்கன் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.  8 .5 லட்சத்தை அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக ஆறு பேரை நன்னிலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

படத்தில் உள்ளது … மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் தட்சிணாமூர்த்தி

திருவாரூர் மாவட்டம் வீதி விடங்கன் டாஸ்மார்க் கடையில் இருந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செய்யப்பட்ட  டாஸ்மார்க் மதுபான விற்பனைத் தொகையை எடுத்துக்கொண்டு வீதி விடங்கன் டாஸ்மார்க் ஊழியர் தட்சணாமூர்த்தி நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருநதார்.

அவர்  நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில்  சென்று கொண்டிருக்கும் பொழுது, அவரை திடீரென அப்பகுதியில் உள்ள ஆற்றோரம் மறைந்திருந்த முகமூடி அணிந்திருந்த மூன்றுக் கொள்ளையர்கள் வழி மறித்து, அவரின் இரு சக்கர வாகனத்தோடு, அவரையும்  கீழேத்தள்ளிவிட்டு தொடர்ந்து  அவரை தாக்கியும், மேலும் அவரிடமிருந்த ரூ. எட்டு லட்சத்து 50 ஆயிரத்தையும் பறித்து சென்றுள்ளனர்.

இவ் வழிப்பறிக் கொள்ளைக் குறித்து டாஸ்மாக் ஊழியர் தட்சணாமூர்த்தி, நன்னிலம் காவல்நிலையத்தில் மேற் குறிப்பிட்டவாறு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் ரமேஷ், சேவாக், அரவிந்தன், இளையராஜா, முரளி உள்ளிட்ட ஆறு நபர்களை இந்த வழிப்பறிக்கொள்ளை தொடர்பாக நன்னிலம் காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து  மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here