திருநெல்லிக்காவல், மார்ச். 05 –
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநெல்லிவனநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில், தமிழாண்டு மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திருக்கோவிலில் சூரிய பகவானை வழிபடும் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோயிலின் சிறப்பாக பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள சுவாமியை வணங்கி வழிப்படுவது வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் இத்திருக்கோயில் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியபகவான் தானியிழந்த கண்களை பல சிவாலயங்களுக்கு சென்று அங்கு சிவனைத் தரிசித்து தன்னுடைய பாவம் நீங்கப் பெற்று திருநெல்லிகா திருத்தலம் வந்து தன்னுடைய பாவம் நீங்க பெற்றதாக இத்திருக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
அச்சிறப்பு மிக்க அத்திருத்தலத்தில் ஆண்டுதோறும், சூரியபூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறதென தண்டபாணி சிவாச்சாரியார் தெரிவிக்கிறார்.
மேலும் அதனை முன்னிட்டு நேற்றையத் தினம் நடைப்பெற்ற மூன்றாம் நாள் சூரிய பூஜை விழா சரியாக மாலை 06.00 மணிக்கு சூரிய கதிர்கள் நெல்லிவனநாதர் மீது முழுமையாக பட்டவுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைத் தந்து அருள்மிகு நெல்லிவனநாதேஸ்வரரை வழிப்பட்டனர். மேலும் இந்நிகழ்வின் நிறைவில் வந்திருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.























