கும்பகோணம், மார்ச், 02 –
கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ராயா கோவிந்தராஜன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது உடன் சுரேஷ் மூப்பனார் மாநிலச் செயலாளர் எம் கே ஆர் அசோக்குமார் மாநிலத் துணை பொது செயலாளர் சாதிக் அலி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார் மற்றும் தமாக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவுகளின் தொடக்கம் சரியில்லை என்றால், தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றும், பணநாயகம் முறையில்தான் அங்கு தேர்தல் நடைபெற்றது என்று, மேலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் அப்போதுதான் உண்மைத் தெரியும் என்றார்.
மேலும் தொடர்ந்து, அவர் தெரிவிக்கையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டுமெனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதுப்போன்று, சமையல் கேஸ் விலை உயர்ந்திருக்கிறது அவ்விலையேற்றம் பொருளாதார ரீதியில் சாமனிய மக்களை அது பாதிக்கும் என்றார். மேலும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுகவும் தனது தேர்தல் வாக்குறுதியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் தருவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தனர். அதனை நினைவில் கொண்டு இந்நேரத்தில் அளித்த வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். என்றார். மேலும் சமையல் கேஸ் விலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது. தமக்கு வருத்தம் அளிப்பதாகவும், மேலும் அங்கு படுகொலை செய்யப்பட்ட அவரது உடல் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார்.
மேலும் தற்போது இந்தியாவில் நடந்து வரும் மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. என்பதை காட்டுகிறது எனவும், அப்போது செய்தியாளர்களிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்தார்.