கும்பகோணம், மார்ச். 02 –

கும்பகோணத்தில் மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைவண திருத்தலங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும்.

அது போல் இவ்வாண்டும் இவ்விழா கடந்த 25ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் என ஆறு சைவத்தலங்களிலும் (ஏனைய ஆறு தலங்களில் ஏகதின உற்சவம்) 26 ஆம் தேதி சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப்பெருமாள், இராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணல தலங்களிலும் (பிற இரு தலங்களில் ஏகதின உற்சவம்) கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிகளின் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சைவத்தலங்களில் 5 ஆம் நாளில், ஆதிகும்பபேஸ்வரசுவாமி திருக்கோயில், வியாழ சோமேஸ்வரசுவாமி திருக்கோயில் மற்றும் காசிவிஸ்வநாதசுவாமி ஆகிய மூன்று தலங்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள், பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, நறுமண மலர்கள் மாலைகள் சூடி, அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருள, திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

மூன்று திருக்கோயில்களில் இருந்தும் வந்த ஓலை சப்பரங்கள் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பு அருகே சங்கமித்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் இருந்து அருள்பாலித்தனர் இதனை ஏராளமானோர் திரண்டு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here