கும்பகோணம், பிப். 26 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் அண்ணாசிலை அருகில் அமைந்திருக்கிறது அன்பு பேக்கரி, இப்பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது.
அதில் காண்போர் கண்களையும், நாவையும் கட்டிப்போடும் விதத்தில் பல்வேறு விதமான கேக்குகள் அணிவகுத்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பிளம்கேக், கப் கேக், ரோல் கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஃப்ரெஷ் கிரீம் கேக் உட்படப் பல வகையான கேக்குகள் காட்சிக்கும் ,விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் குறிப்பிடத் தக்க வகையில் கண்காட்சி நடந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை புதிய வகை கேக்குகள் தயார் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தன.
மேலும், இக் கேக் கண்காட்சி திருவிழாவின் ஹைலைட்டாக அப்பேக்கரி பணியாளர்களின் கைத் திறனில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சினிமா ரசிகர்களால் அன்போடு ஆழைக்கப்படும் தல மற்றும் தளபதி எனும் அஜித், விஜய் திருவுவம் தாங்கிய 6 அடி உயர கேக்குகள் அமைந்திருந்தன.
மேலும் அவர்கள் இருவருமே இன்றைய தமிழ் சினிமாவின் ஹாட் கேக்குகள் என்பதாலோ என்னவோ? இருவரையுமே பின்புலமாக வைத்து இருவரது உருவ அமைப்பையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் விதத்தில் இரண்டு கேக்குகள் 6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
மேலும் அக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கேக் உருவச்சிலையில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் சிவப்பு சட்டையில் அஜித்தும், வெண்ணிறச் சட்டையில் விஜயும் அவரவர் ரசிகர்களையும், சிறுவர் சிறுமிகளையும், பொதுமக்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த இருவரது உருவங்களையும் தாங்கிய கேக் சுமார் 120 கிலோ என்றும், மேலும் இதற்கான பொருட்செலவு சுமார் ரூ 2 1/2 லட்சம் என்றும் தெரிய வருகிறது.
இந்தக் கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேக்கரி கூட்டமைப்பினர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், மேலும் விஜய், அஜித் ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் திரளாக வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல வகையான கேக்குகளை கண்டு ரசித்தும் சுவைத்து உண்டும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அப்பொழுதைக் கொண்டாடினார்கள்.