கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் இவ் ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை தலைவராக (திமுக) உள்ளுர் கணேசன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில் இன்று ஒன்றிய குழு சாதாரண கூட்டம் கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்தில் ஒன்றிய துணைத்பெருந்தலைவர் கணேசன் வட்டார வளர்ச்சி ஆணையர் பூங்குழலி வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முன்னதாக இயற்கை எய்திய ஊராட்சி ஒன்றிய குழு 1வது வார்டு உறுப்பினர் கண்ணகியின் கணவர் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியை அம்மன்றம் செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு தலா 10 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ள மன்றம் அனுமதி வழங்கிடும் தீர்மானங்கள் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இவ் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக 7 உறுப்பினர்களில் 1 உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை மற்ற 26 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
























