உத்திரமேரூர், ஜன. 12-
உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையிலான புதிய செல்போன் செயலி அறிமுக விழா நேற்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பொன் சசிகுமார் ஊராட்சி மன்றத் தலைவர் மங்கள கௌரி வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலதி அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம் கலந்து கொண்டு ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைக்கும் புதிய செல்போன் செயலினை அறிமுகம் செய்து வைத்தார்,
மேலும், இச்செல்போன் செயலி தமிழ்நாட்டிலேயே பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்து வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இச் செல்போன் செயலி மூலம் பள்ளி மாணவ-மாணவியர்களின் நடவடிக்கை மற்றும் பள்ளியின் அவ்வப்போது நிகழக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும், உடனுக்குடன் இச்செய்தி பெற்றோர்களை சென்றடையும் வகையில், வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அச்செயலியினால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விரிவாக இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட என ஏரளாமானவர்கள் கலந்து கொண்டனர்.

























