திருபுவனம், டிச. 31 –
கும்பகோண அருகே உள்ள திருபுவனத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு தலைமைக் கொறடா, தலைமையில் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் பேரூராட்சி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஒன்றிய செயலாளர் கூகுர் அம்பிகாபதி பேரூராட்சி செயலாளர் பஞ்சநாதன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, எலும்பு முறிவு மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய் பரிசோதனைகளும், ஆய்வகப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இம்முகாமில் சத்தான உணவுகளை சாப்பிடும் முறை குறித்துவிரிவாக விளக்கிடும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதில் சத்துமாவு பாயசம், எள் உருண்டை, கொழுக்கட்டை, சத்துமாவு உருண்டை, கபசுரக் குடிநீா் போன்ற உடல் ஆரோக்யம் சம்பந்தப்பட்டவைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்து.
மேலும் முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம், காசநோய் தடுப்பு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, யானைக்கால் நோய் தடுப்பு, டெங்கு தடுப்பு என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் திருபுவனம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.






















