அம்பத்தூர், டிச. 22 –

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் “போதையில்லா தமிழ்நாடு” என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் டில்லிபாபு,   தனது  பார்ட்டி சகிதம் பாடி, பிரிட்டானிய பேரூந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக நின்றுக் கொண்டிருந்த  நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து சோதனை மேற்கொண்டதில் 1) சிலம்பரசன்(21), த/பெ ஐயப்பன், எண்:1054, 3வது பிளாக், முகப்பேர் மேற்கு, செ-37 மற்றும் 2)கோகுல்(19),  த/பெ.ஜோதிபாசு, எண்.154, பிள்ளையார் கோயில் தெரு, அருள்தாசபுரம், தத்தனேரி, மதுரை-18, என தெரியவந்தது.

மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் 21 கிலோ கஞ்சாவை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மீதும் அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு. தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஜே.எம்.அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதனைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்ட மதுவிலக்கு பிரிவு, அம்பத்தூர்,  ஆய்வாளர், T1.அம்பத்தூர்  காவல் நிலையம், (ச&ஒ) மற்றும் காவல் ஆளினர்களை பாராட்டினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here