பொன்னேரி, அக். 09 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பிரசித்திபெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையானது நடைபெற்று வந்தது அவ்விழா .இன்றுடன் நிறைவு பெறுவதால் யாக கலச பூஜைகளுடன் 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கலச நீரானது மேள தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சூரியன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது.
இவ்விழாவில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.





















