திருவாரூர், அக். 04 –   

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில், பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் உள்ளது.

இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சரஸ்வதி தாயார் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தன் வழிபட்டதால், இவ்வூருக்கு கூத்தனூர் என பெயர் கிடைக்கப்பற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி தாயாரின் பாத தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் வருகை புரிந்து சரஸ்வதி தேவியை வழிபட்டு செல்கின்றனர். அதேபோல் மாணவ மாணவிகள் நோட்டு புத்தகம் பேனா சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும், இவ்விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பேட்டி:

சுஜிதா, திருவாரூர்

சங்கர் சிவாச்சாரியார்

கூத்தனூர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here