கும்பகோணம், அக். 03 –
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் மிகச்சிறப்பாகவும் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியும் மேலும் அவரது வாழ்வில் கடைப்பிடித்து வந்த பல்வேறு கொள்கைகளை பின் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதி மொழிகளை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் பள்ளி கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அவ்விழாவினை கொண்டாடினார்கள்.
அதன் பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் காந்தியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட செயலாளர் கோ.சங்கர் தலைமையில் அக்கட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மகாமகம் குளத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக சென்று, உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். மேலும், மது இல்லா தமிழகம் உருவாக்க வேண்டும் அதற்காக அனைவரும் பாடுபடுவோம் என்ற முழக்கத்தை எழுப்பி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட பொருளாளர் பாலகண்ணன் மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி செயற்குழு உறுப்பினர் அன்பு பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்காந்த் சுகுமார் கேப்டன் மன்றம் மாவட்ட செயலாளர் தவசி செல்வம் துணை செயலாளர் ஐயப்பன் ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் இன்பா கோவிந்தராஜ் செல்வம் மாவட்ட மகளிரணி துணை செயலாளர் அமுதா மோகன்ராஜ் லதா முன்னாள் மாநகர செயலாளர் அழகர் மீனவர் அணி செயலாளர் கோவிந்தராஜ் நிர்வாகிகள் பார்த்திபன் வடிவேல் சரவணன் தங்கராஜா தாராசுரம் கார்த்திக் சுவாமிநாதன் லோகநாதன் பாபநாசம் நிர்வாகிகள் அண்டக்குடி கனேசன் சந்தரப்பெருமாள் கோகிலா தாஸ் முருகானந்தம் சண்முக சுந்தரம், செல்வம் ஜீவா. பார்த்திபன அன்சாரி ஜாவீர் செந்தில் வேப்பதுர் தர்மா கேசவன் ஆனந்த பாபு அருண் குமார் ஶ்ரீதர் ஹரிதாஸ் தனபாலன் ஜெயராமன் பிரகாஷ் மகேந்திரன் லிங்கம் தட்சிணாமூர்த்தி குருமூர்த்தி செந்தில் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.