காஞ்சிபுரம், செப். 30 –
காஞ்சிபுரத்தில் இன்று நான் தாயாக வேண்டும் என்ற புதிய திரைப்படத்தின் முதல் நாள் படத்துவக்க விழா திருவீதி பள்ளம் என்ற இடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஞானி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து மேயர் முதல் நாள் பட பதிவுக்காக கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இப்பட துவக்க விழாவில் இணை இயக்குனர் கார்த்திகேயன், மாதேஸ்வரா உதவி இயக்குனர் திருள் பழனி , சிவஜெகதீஸ்வரன், பிரபாகர், பாடலாசிரியர் பாரிசாகரன் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரேம்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மாரி மற்றும் நடிகர் அக்ஷய் மற்றும் தேவ் நடிகை அர்ச்சனா சிங், வனிதா நடிகர் மற்றும் இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் துணை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















