மீஞ்சூர், செப். 23 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் அவ்வலுவலகத்தின் உள்ள மன்ற அரங்கில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு. துணைத் தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.

இளநிலை உதவியாளர் அன்பரசு மன்றத் தீர்மானங்களை வாசித்து இக்கூட்டத்தினை :உவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் துரைவேல் பாண்டியன் பேரூராட்சியின் மன்ற வளாகத்தில் பெரியார் ,அண்ணா, காமராஜர், அம்பேத்கர், உள்ளிட்ட தேச தலைவர்களின் புகைப்படங்களை நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து பேசிய இரண்டாவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் சந்திர பிரபு ஜெயின் கல்லூரி நிர்வாகத்திடம் கூடுதலான வரி விதிப்பு செய்ய வேண்டும். அரியன் வாயில் பகுதிக்கு சமுதாயக்கூடம் அமைத்து தரும்படியும், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மழைநீர் கால்வாய்களை தூர்வாரி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். .

மேலும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளின் தேவைகள் பற்றியும், தற்போது நிலவும் குறைகளுக்கும் தீர்வு காணும் படியும்  ஒவ்வொரு கோரிக்கைகளாக நிறைவேற்றி தரும்படி மன்றத்தில் தீர்மானங்களாக வைத்தனர்.

.அப்பொருள் குறித்து விவாதித்த பேரூராட்சியின் செயல் அலுவலரும் பேரூராட்சியின் தலைவரும் பணிகளை விரைந்து முடித்திட அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என தெரிவித்தனர். இதில் நக்கீரன், பாஸ்கர் ,ரஜினி, பரிமளா அருண்குமார் சுகன்யா மோனிகா ராஜேஷ் உள்ளிட்ட 15 மன்ற உறுப்பினர்களும், மேலும் துணை இளநிலை உதவியாளர் கருணாகரன். அலுவலக உதவியாளர்கள் மொய்தீன்கான். உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here