திருவாரூர், செப். 21 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக  பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்  பேரளம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தேவதாஸ். இவரிடம் பட்டா மாறுதலுக்காக பயனாளி முகமது என்பவர் சென்றுள்ளார்..

இந்த நிலையில் தேவதாஸ், முகமதுயிடம் ரூபாய் எட்டாயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க மனமில்லாத தால், இது குறித்து பயனாளி முகமது, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு  மற்றும் தடுப்புப் பிரிவுத்துறை டிஎஸ்பி நந்தகோபால் பொடி வைத்து பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு, பயனாளி முகமதுக்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளார். அதன்படி இன்று நந்தகோபால் மற்றும் அவருடைய குழு பேரளம் கிராம நிருவாக அலுவலகத்திற்கு சென்றது. பயனாளி முகமதுயிடம் கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ் ருபாய் எட்டாயிரத்தை லஞ்சமாக கேட்டு வாங்கும் போது,

தேவதாஸை லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here