கும்பகோணம், செப். 14 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தை முதலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பிறகு நடந்ததாக போலியாக நடத்திய ஊராட்சி மன்ற தலைவரையும் அரசு அலுவலர்களையும் கண்டித்து தமிழக அரசு ஆணைப்படி பொதுமக்கள் பார்வைக்கு வரவு செலவு கணக்கு பலகை வைக்காததைக் கண்டித்தும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா இலவச வீடு வழங்கும் திட்டம், 100 நாட்கள் வேலை, சாலைப்பணி, ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் ஊழல்கள் நடந்துயிருப்பதாக கூறியும், மேலும் சுகாதாரம் மற்றும் திட்டக் கழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்து நிறுத்தம் அருகில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் பாஜக பொதுச்செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் பத்து ரூபாய் இயக்கம் சுப்பிரமணியன் பாஜக பொதுச்செயலாளர்கள் பன்னீர்செல்வம் ராமகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர் அதிமுக கிளை செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















