பொன்னேரி, செப். 12 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் புதுவாயல் பிரகஸ்பதி ஸ்ரீ ஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையிலும், பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜபட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவினை முன்னிட்டு நைமித்தக ஆராதணம், திருமஞ்சனம், யாகசாலை நித்திய ஹோமம் உள்ளிட்ட கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் சௌந்தரவல்லி சமேத கரி கிருஷ்ண பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது கலச  நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பாஜக பொதுக்குழு உறுப்பினர் வி.பத்மநாபன், கேந்திர தலைவர் செல்வம், டி.வி.எஸ் நிறுவன ராம்குமார் மற்றும் பி.எஸ். நாராயணன், பி.மாதவன் உள்ளிட்டவர்கள் உட்பட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here