கும்பகோணம், செப். 05 –

தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநில அளவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவராக எஸ் எம் முனியாண்டி உள்ளார்.

பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிவுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள் முழுமையாக ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும், ஊராட்சிகளில் உள்ள சுகாதார பணிகள், தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் போன்றவற்றுக்கு போதுமான நிதி ஆதாரங்களை மாநில அரசு வழங்குவதில்லை என்றும், இதனால் வாக்களித்த மக்களுக்கு தேவையான வசதிகளை, கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியாத சூழ்நிலையில் உள்ளதால், வருகிற 14ம் தேதி சென்னையில், மாநில அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்கும், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணத்தில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கும்பகோணம் ரயிலடி எதிரில் உள்ள தனியார் விடுதியில் கும்பகோணம் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் ஜெயக்குமார், சட்ட ஆலோசகர் கார்த்திகாயினி கரிகாலன் சங்க ஆலோசகர் ரவி உள்ளிட்ட ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எஸ் எம் முனியாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் எஸ் எம் முனியாண்டி,

பஞ்சாயத்ராஜ் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள், உரிமைகள் முழுமையாக தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை, ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள தேவையான நிதி ஆதாரங்களையும் போதுமான அளவிற்கு வழங்குவதில்லை என்றும், தமிழகத்தில் ஆட்சி தான் மாறியிருக்கிறதே தவிர, காட்சிகள் எதுவும் மாறவில்லை என்றும், பெண் தலைவர்கள் மற்றும் பட்டியலின தலைவர்கள் நிலை இன்னும் மோசம் என்றும், 2001 – 2006 நிதியாண்டிற்கு பிறகு ஊராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்படாத நிலையே இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது என்றும் குற்றம்சாட்டிய அவர், ஊராட்சி மன்ற பணிகளுக்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி மூலமே ஒப்பந்தபுள்ளிகள் கோர வேண்டும் என்றும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 2 ஆயிரத்தை மாற்றி, ரூபாய் 25 ஆயிரமாக வழங்கிட வேண்டும் என்றும் இதற்காக வரும் 14ம் தேதி சென்னையில் மாநிலம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும், அதன் ஒருபகுதியாக இன்று கும்பகோணத்தில் 5 மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது என்றும் எஸ் எம் முனியாண்டி மேலும் தெரிவித்தார்.

 

பேட்டி : எஸ் எம் முனியாண்டி, மாநில தலைவர்,

ஊராட்சி மன்ற தலைவர் மாநில கூட்டமைப்பு

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here