நாமக்கல், ஆக. 30 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா ஆகஸ்டு 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து காவிரி தீர்த்த நீர் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேளதாளம் முழங்க திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்துக்கொண்டும், காவிரி தீர்த்தக்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். பின்னர் எல்லை மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து நாளை மறுதினம் கும்பாபிஷேக விழா நடைப் பெறயிருக்கிறது. இந்நிகழ்வில் திரளான பக்தகள் பங்கேற்க வருவதை தொடர்ந்து அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.