காஞ்சிபுரம், ஆக. 28 –
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே உள்ள பெரியநத்தம் கிராமத்தில் 145 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52) நேற்று அமாவாசை என்பதால் தனது மனைவி செல்வி இவர்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரும் குடம்பத்துடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்க முயற்சி செய்திருப்பது தெரிய வந்த தைத் தொடர்ந்து பின் பக்கம் சென்று பார்த்துள்ளனர் அப்போது பின் பக்கமாக கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உதைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் வீட்டின் உள் சென்று பார்க்கும் போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 145 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
உடனடியாக கொள்ளை சம்பவம் குறித்து மாகறல் காவல்நிலைய போலீசார்க்கு தகவல் தெரியபடுத்த்தி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே 145 பவுன் தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் பணம் திருடுபோனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.