காஞ்சிபுரம், ஆக. 22 –

பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான போதை தரும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி லோகநாதன் என்பவரை காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசார் மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தற்போது போதை கலாச்சாரம் மிகவும் அதிகரித்து வருகின்ற நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ், கூல்லிப் போன்ற புகையிலை பொருட்களும் மாணிக்சந்த், விமல் ,ரெமோ உள்ளிட்ட போதைப் பாக்குகளும் எந்த தடையும் இன்றி படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதனை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியில்வாகன சோதனையில் ஈடுப்பட்டுயிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மாருதி வேன் ஒன்றை பாலு செட்டி சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் , வேலாயுதம் மற்றும் தலைமை காவலர் சங்கர் ஆகியோர்  மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அச்சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ஹான்ஸ் ,கூல்லிப் போன்ற புகையிலை மூட்டைகளும் விமல் உள்ளிட்ட பாக்கு மூட்டைகளும் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் சந்தை மதிப்பு சுமார் ஐந்து லட்ச ரூபாய் என கூறப்படுகின்றது. மேலும், போதைப் பொருட்களையும் கடத்தி வரப்பட்ட வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பல வருடங்களாக போதை பாக்குகளை கடத்தி வந்த கடைகளுக்கு வியாபாரம் செய்து வரும் பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here