கும்மிடிப்பூண்டி, ஆக. 18 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட ஒன்றிய பெருந்தலைவர் உமாமகேஸ்வரி. கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்றதலைவர் நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் ஜெயந்திஹரி, எளாவூர் பள்ளியின் ஓன்றியகுழு உறுப்பினர் இந்திரா திருமலை புலித்தோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் அடங்கிய தவறைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கும்மிடிப்பூண்டி அரசு பொது மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புது கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ,ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ,மாதர் பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,மாதர்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேர்வாய் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ என் கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட 11 பள்ளிகளை சேர்ந்த 1971 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில், நடராஜன், லோகநாதன், ஜெகதீசன் ,உதயசூரியன், உள்ளிட்ட திரளான மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஏலாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.