ஆவடி, ஆக. 17 –

ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகரில் அமைந்துள்ள சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தாளாளர் , எஸ் ரவி சோமசுந்தரம் தலைமையிலும், பள்ளி முதல்வர் கே.பாஸ்கர் முன்னிலையிலும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழாவினை போற்றும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திரப்போராட்ட தலைவர்களின் வேடமணிந்து நடத்திய கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.

முன்னதாக தாளாளர் பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியினை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தி, பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே சிறப்புரை நிகழ்த்தினார் தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு உறுதிமொழியினை பள்ளி மாணாக்கார்களோடு சேர்ந்து உறுதிமொழி ஏற்றார்.

மகாத்மா காந்தி, பாரதியார், ஜான்சி ராணி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட தலைவர்கள் வேடமணிந்தும், சமூக நீதி காவலர்கள் தந்தை பெரியார் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் வேடமணிந்து அவர்களின் தியாகங்களை போற்றும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here