திருவள்ளூர், ஆக. 05 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலின் தீமிதி திருவிழா வருகின்ற ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் மூன்று தினங்களாக பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
அதனைத்தொடர்ந்து தீமிதிக்கும் பக்தர்கள் பங்கேற்ற சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு .சாட்டையடி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்வின் போது சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி. பலராமன் கலந்துக் கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், .பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், பொன்னேரி தீபன் மற்றும் மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி உள்ளிட்டோர்களும் சம்பத் . சிலம்பரசன், சங்கர், செந்தில்குமார், கோதண்டன், சௌகத்அலி, ஸ்ரீதர், யுவராஜ், மெதூர் ரமேஷ் உள்ளிட்ட திரளான கட்சித் தெண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.






















