ஆவடி, ஆக. 03 –

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர்.

இந்தியா முழுவதும் நேற்று பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா அவ் வங்கியின் சார்பில் கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு  பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஆவடி கிளை அலுவலக மேலாளர் கர்யம்முரளிசேகர் முன்னிலையில், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதில் தேர்வு செய்யப்பட்ட ஆவடி காமராஜ் நகர் சத்தியமூர்த்தி அரசினர் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் இலவசமாக மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருநின்றவூர் அருகே உள்ள நெமிலிச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மின்விசிறி, எழுது பலகை, மின்விளக்குகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆர். ஓ. வாட்டர் பிளாண்ட் போன்ற உபகரணங்களை வழங்கினார்.

மேலும், ஆவடி கிளை அலுவலகம் வாசல் அருகே ஆவடி மார்க்கெட் அரிமா சங்கத்துடன் இணைந்து குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.

அதில், வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள், ஆவடி லைன்ஸ் கிளப் சங்கத்தினர், வங்கி வாடிக்கையாளர்கள், மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று  ரத்த தானம் செய்தனர்.

இந்நிகழ்வில் வங்கி ஊழியர்கள், ஆவடி லைன்ஸ் கிளப் மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், ஆவடி தலைவர் பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் சதீஷ்கோவர்த்தனன், ராணுவ வெல்பர் அசோசிஷன் எம். திருவேங்கடம், குருமூர்த்தி, சுரேஷ் மற்றும் திரளான வங்கி வாடிக்கையாளர்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here