திருவள்ளூர், ஆக. 01 –
நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர். ஆர் .ராவணன் கலந்துகொண்டு மாணவர்களின் மத்தியில் சிறப்புரையாற்றினார் . மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி கணினி போன்ற இன்னும் சில தனிதிறமைகளை தாங்களாகவே வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எளிமையாக வெற்றிபெற முடியும் எனவும், மேலும் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நான் முதல்வன் என்ற திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி பேசினார். தொடர்ந்து 382 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார்.
மேலும், தாவரவியல், உயிரியல் மற்றும் தாவர தொழில் நுட்பவியல் பிரிவில் இக்கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவி பங்கஜ்குப்தாவிற்கு 5000 ரூபாய் ஊக்கத் தொகையும், மூன்றாம் இடம் பெற்ற ராஜிவிற்கு 2500 ரூபாய் ஊக்க தொகை மற்றும் சான்றிதழும் மேலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபாய் ஊக்கத் தொகை மற்றும் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் நேமிசந்த் கட்டாரியா, இணை செயலாளர் சுரேஷ் ரத்தோட், கல்லூரி பொறுப்பு முதல்வர் சுஜாதா, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என திரளானவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.





















